ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பா-மகன் என இரட்டை ரோல்களில் தான் ராம் சரண் நடித்துள்ளாராம். அப்பா ராம் சரண் கேரக்டர் வருவது ஃபிளாஷ்பேக் காட்சிகளாம். இந்த இரண்டு கேரக்டர்களும் சந்திப்பார்களா, சந்தித்துக் கொள்ள மாட்டார்களா என்பது தான் ஆர்சி 15 கதையாம்.
தற்போது ஆர்சி 15 படத்தின் ஷுட்டிங் ராஜமகேந்திரவரம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. அஞ்சலி மற்றும் ராம் சரண் நடிக்கும் பாடல், ஆக்ஷன் உள்ளிட்ட மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாம். இந்த ஷுட்டிங் மார்ச் 4 ம் தேதி நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் துவங்கப்பட உள்ளதாம். டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கியாரா அத்வானி, ராம் சரண் மீது காதல் கொள்ளும் பெண்ணாக நடித்துள்ளாராம். அஞ்சலி, ராம் சரணின் அம்மா ரோலில் நடித்துள்ளாராம். இதனால் படத்தை எப்போது முடிப்பார்கள், எப்போது ரிலீஸ் செய்வார்கள் என அனைவரும் கேட்டு வருகின்றனர்.