செஞ்சி பேரூராட்சி சார்பில்அரசு மருத்துவமனையில் நடைபெறும் சிறப்பு தூய்மை துப்புரவு முகாமினை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை நிகழ்ச்சி சார்பில் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு துப்புறவு தூய்மை முகாம் ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு துப்புரவு தூய்மை முகாமினை செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார். மருத்துவமனை வளாகம், பிரசவ வார்டு பகுதி,ஆண்கள், பெண்கள், உள் நோயாளி பகுதி, பிணவரை பகுதி,அவசர பிரிவு ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் மருத்துவமனையில் உள்ள குப்பைகளையும், மருத்துவ கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பணியாளர்கள், மற்றும் நோயாளிகளுடன் வரும் பொதுமக்கள் மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிவுருத்தினார்.
தொடர்ந்து செஞ்சி சத்திரத் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில்குளத்தில் நடைபெற்று வரும் துப்புரவு பணியை பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது குளத்தில் தண்ணீரில் உள்ள பாசைகளை அப்புறப்படுத்தி குளத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் கவுன்சிலர்கள் சிவக்குமார், நூர்ஜஹான் ஜாபர், புவனேஸ்வரி அண்ணாதுரை, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.