• Wed. Jan 22nd, 2025

விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினி!

இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான படம் ‘டாணாக்காரன்’. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ்.ஆர் .பிரபு தயாரித்துள்ளார்.

காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளே நடைபெறும் பிரச்சனைகள், பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்காக நடிகர் விக்ரம் பிரபு 9 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார். படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், டாணாக்காரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விக்ரம் பிரபுவிற்கு செல்போனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனை விக்ரம் பிரபுவே உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ” சூப்பர் ஸ்டார் அவர்களே அழைத்து என்னைப் பாராட்டியுள்ளார். நம் கனவை விடாப்பிடியாகப் பின்பற்றுவது வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும் என்பது உண்மை. மேலும் டாணாக்காரன் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.