• Wed. Dec 11th, 2024

தமிழ் புத்தாண்டில் சூர்யா – பாலா கூட்டணியின் வேற லெவல் அப்டேட்!

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.