• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோர் மரியாதை

ByM.I.MOHAMMED FAROOK

Jul 15, 2026

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் அம்பாள் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழனிவேலு உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜரின் கல்வி வளர்ச்சி, சமூக நீதி மற்றும் மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து, அவரது சேவைக்கு அரசு அதிகாரிகள் புகழாரம் சூட்டினர். இந்த நிகழ்வில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.