• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ராஜமௌலியின் நெகிழ்ச்சி வார்த்தைகள்!

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களின் நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, 1000 கோடி வசூல் செய்தது.

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவில், ராஜமௌலி ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் அலியா பாட், அஜய்தேவ் கான் கலந்துகொண்டார்கள். அப்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் இயக்குனர் ராஜமௌலியிடம் ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா..? என கேட்டார்கள் அதற்கு பதிலளித்த ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பேன் ஆனால் அதற்கு சில காலம் எனக்கு தேவைப்படுகிறது. அதுவரை பொறுத்திருங்கள்.

இரண்டாம் பாகத்தை இயக்கினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறும் என்பதற்கு மட்டுமல்லாமல் என் தம்பிகளான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் மீண்டும் அதிக நேரம் செலவிடலாம் என நெகிழ்ச்சியுடன் ராஜமௌலி கூறியுள்ளார்..