ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் . நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவது கனமழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், சுமார் 176 பேர் உயிரிழந்துள்ளனர். 5000 வீடுகள் சேதமடைந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.