• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சேலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் மழையால்
சேலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி….
கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் நூறு டிகிரிக்கும் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பச் சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது திடீரென கருமேகங்கள் சூழ கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டியில் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்