
மாநில அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏவமான எதிர்கோட்டை சுப்பிரமணியன் இல்ல திருமண விழா சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா ஆலங்குளத்தில் நடைபெற்றது .

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளருமான ஆர். பி. உதயகுமார் திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் ராஜலட்சுமி,
முன்னாள் எம்எல்ஏவும் கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான ராஜவர்மன், சந்திர பிரபா, கிழக்கு மாவட்ட நகர கழகம் ஒன்றிய கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
