
கூலி உயர்வு கேட்டு சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் 16 நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு 16 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது நாளை முதல் விசைத்தறி கூடங்கள் இயங்கும் என அறிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், போன்ற பகுதிகளில் 10,000 மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் நேரடியாக 20,000 பேரும் மறைமுகமாக 15 ஆயிரம் பேரும் தொழிலாளர்கள் உள்ளனர்.
மே 1ஆம் தேதி அமல்படுத்தப்பட வேண்டிய மூன்று ஆண்டுகால கூலி உயர்வு ஒப்பந்தம் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.. இதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு பேண்டேஜ் மருத்துவ துணி கூலிக்கு நெசவு செய்து உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட அதிபர்கள் கூலி உயர்வு இன்னும் ஒப்பந்தம் படி நிறைவேற்றப்படாததால், கடந்த 11 ம் தேதி 700 க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களை அடைத்து போராட்டத்தை ஈடுபட்டனர் இதனால் 10 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது
இதன் காரணமாக 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது மருத்துவ துணி உற்பத்தியும் தேக்கமடைந்துள்ளது.
இது குறித்து கூலிக்கு நெசவு செய்யும் சிறு விசைத்தறி கூட அதிபர் சங்க தலைவர் குருசாமி தலைமையில் மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில்ராஜ் மற்றும் முன்னிலையில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தையை பலமுறை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் சங்க தலைவர் குருசாமி மற்றும் மருத்துவ துணி ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் 16நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது நாளை முதல் விசைத்தறிக்கூடங்கள் இயங்குமன சிறு விசைத்தறி கூட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
