
வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த கீழச் செல்லையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 46) இவர் பூ விற்பனை செய்து வருகிறார்.

இவரது மகள் புல்லக் கவுண்டன்பட்டியில் வசித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று நலம் விசாரித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் கீழச் செலவு வரும் வந்து கொண்டிருந்தபோது வளைவில் தடுமாறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவர் இருந்தது பார்த்து அக்கம் பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குருநாதன் இறந்தார். இது குறித்து மகள் மாரிச்செல்வி போலீசில் புகார் செய்ததன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஹரிராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
