• Sat. Jun 10th, 2023

தேனி: வீரபாண்டியில் சொன்னாத்தான்….செய்வீங்களா… !

வீரபாண்டி பேரூராட்சியில் மக்களை முகம் சுளிக்க வைத்த ‘பப்ளிக் டாய்லட்’ அரசியல் டுடே செய்தியின் எதிரொலியாக ‘பளீச்’ ஆனதுடன், மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பாராட்டை பெற்றுள்ளது.

தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு, செட்டியார் தெருவில் 2007-08ம் ஆண்டு ரூபாய் பல லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட நவீன சுகாதார வளாகம் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் ‘பப்ளிக் டாய்லட்’ பல மாதங்களாக பராமரிப்பின்றி காட்சியளித்தது.

இதனால் ‘அவசர’ நேரங்களில் ஒதுங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். காரணம், அந்தளவிற்கு அங்குள்ள கழிப்பறை மற்றும் குளியலறை கதவுகள் ‘பப்பரப்பா…’ வென திறந்து கிடந்தன.

அதுமட்டுமின்றி அங்குள்ள குழாயை திறந்தாள் தண்ணீருக்கு பதிலாக புஸ்…புஸ்…என காற்று மட்டுமே வருகிறது. இதில் சில குழாய்கள் சேதமடைந்து துருப்பிடித்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் ‘பலான’ காரியத்திற்கு ஒதுங்கும் இடமாகவும் இருந்ததாக பொதுமக்களிடமிருந்து பல புகார்கள் வந்தன.

இதையெடுத்து, நேற்று (பிப்., 3) ‘பப்ளிக் டாய்லட்’ அவலநிலையை வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் தொலைபேசியில்பேசிய விஷயத்தையும் குறித்தும், நம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பப்ளிக் டாய்லெட் நான் இப்படித்தான் இருக்கும் என்று பேரூராட்சியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் வாசுமலை சொன்ன தகவலையும்..‌‌, செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

இப் பொது பிரச்சனைக்கு ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் பொறுப்பில்லாமல் இப்படி பதில் கூறுகின்றாரே? பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென முடிவெடுத்து அவலங்கள் குறித்து படத்துடன் செய்தியாக ‘அரசியல் டுடே’ செய்தி வெளியிட்டது.

இச்செய்தியை கண்ட தேனிமாவட்ட கலெக்டர் முரளிதரன், டாய்லெட் பிரச்சனையா உடனே பாருங்கப்பா.., மானத்த வாங்காதீங்க! பத்திரிகை காரங்கிட்ட அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடியவர்கள் எல்லாம் ஒழுங்கா பேச மாட்டாங்களா? என்று எச்சரித்து வதோடு மட்டுமல்லாமல், உடனே சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட கலெக்டர் முரளிதரன்.

பின்பு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கருப்பையா அறிவுறுத்தலில், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுக நயினார் ஆலோசனையின் பேரில், துப்புரவு பணியாளர்கள் அவசர… அவசரமாக… மாக ‘பப்ளிக் டாய்லட்’ டை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர சேதமடைந்த ‘பாத்ரூம்’ கதவுகளையும் சரி செய்துள்ளனர்.

இதுபற்றி, செயல் அலுவலர் ஆறுமுகநயினாரிடம் கேட்டபோது, ‘ இன்னும் ஓரிரு நாட்களில் ‘பப்ளிக் டாய்லட்’ டில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

புதிய கதவுகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அலுவலகத்திற்கு… வாருங்கள்….நான் இப்போது கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்…என ‘ஹாரன்’ ஒலியெழுப்பியவாறு அலைபேசி இணைப்பை ‘கட்’ செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *