• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

By

Sep 12, 2021 ,

திருச்செங்கோட்டை அடுத்த குமாரமங்கலம் அருகே போக்கம்பாளையம் தீர்த்தங்காடு பகுதியில் வசித்து வரும், செங்கோட்டையன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செட்டிசாலப்பாளையம், போக்கம்பாளையம், குமாரமங்கலம் , கவுண்டம் பாளையம் காந்திநகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அதில், பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அந்த சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.