ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்,மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி நிரந்தர பணியிடங்கள் அனைத்திலும் அரசாணை 152,139 ரத்து செய்ய வேண்டும்,இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 115 ரத்து செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புறநூலர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெரும் ஊழியர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், கருப்புசாமி, ராதாமணி, சுரேந்தர், ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரூராட்சிகள் ஊழியர்கள் துறை மாவட்ட துணை தலைவர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.