• Sat. Apr 27th, 2024

வெளியே உண்ணாவிரதம் உள்ளே உண்ணும் விரதம்..!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் , தமிழகம் முழுவதும். அறிவிக்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உண்ணா விரத போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டனர். காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும், ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.


காலை 11 மணிக்கு தொடங்கப்படும் என்று இருந்த இந்த உண்ணாவிரதம் பகல் 12 மணிக்கு தான் ஆரம்பிக்கப்பட்டது. உண்ணாவிரத்துக்கு கலந்து கொள்ள வந்த பெண்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு எதிர்ப்புறம் உள்ள, தனியார் பேக்கரியில் பப்ஸ், டீ என ஒரு புடி பிடித்த பின் தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *