• Tue. Apr 23rd, 2024

ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் .பெரியாறு அணையில் 142 அடி தேக்க வேண்டும் -தேனியில் அண்ணாமலை அறைகூவல்.

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்று நடத்தினார் .ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசியதாவது, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டுச்சதி செய்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் 142 அடி பெரியாரில் தேக்குவதற்கு முன்பே தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். எதிர்காலத்தில் 2024 இந்தியாவின் துணைப் பிரதமராக வேண்டும் என்ற பகல் கனவில் பினராய் விஜயன் உடன் சேர்ந்து இச்சதியை ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார் ,இதற்கு பகிரங்கமாக தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இதை செய்யும் தவறும்பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களைத் திரட்டி பெரியாறு அணைப்பகுதியில், கேரளா அரசை முற்றுகையிடவும் தயாராக உள்ளோம் என்று வீராவேசமாக பேசினார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து பாரதிய கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரனிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *