மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தகவல் தொடர்பு திறன் மேம்பாட்டு பிரிவு மூலமாக பாதுகாக்கப்பட்ட
குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமில், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளில் பாதுகாப்பான முறையில் தேக்கி வைக்கப்படும் குடிநீர் மாதந்தோறும் சுத்தம் செய்து கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றும், சுத்தமான ஆரோக்கியமான குடிநீரை கண்டறியும் பரிசோதனை முறை பற்றியும் இதில், குடிநீரில் உள்ள நச்சு தன்மையைகண்டறிந்து அவற்றை அழிப்பதற்கு ப்ளீச்சிங் பவுடர் குளோரின் கலக்கும் அளவீடு குறித்து பயிற்சி அளித்து மேல்நிலை குடிநீர் நீர் தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள் மற்றும் இயக்குபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமில், உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை பயிற்சி
