• Sat. Feb 15th, 2025

“ஒன்றிணைந்து அறிவிப்போம்” என வலியுறுத்தல்

ByKalamegam Viswanathan

Feb 5, 2025

“ஒன்றிணைந்து அறிவிப்போம்” – இந்தியாவில் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தல்

அப்போலோ புற்றுநோய் மையம், மதுரை, இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ), இந்திய அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கம், மற்றும் மதுரை புற்றுநோய் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4 அன்று “ஒன்றிணைந்து அறிவிப்போம்” என்ற தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கி‌ இருக்கிறது. இந்திய அரசாங்கம் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக வகைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது, இது நோயை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் படியாக அமையும்.

மதுரை அப்போலோ புற்றுநோய் மையத்தை சேர்ந்த மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர். முத்து குமாரசாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்ப்பராஜன், பாலு மகேந்திரா, கதிரியக்க புற்றுநோயியல் நிபுணர் சதீஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கூறுகையில், “அப்போலோ புற்றுநோய் மையத்தில், நாங்கள் ஏற்கனவே ஒரு வலுவான புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை கட்டமைத்துள்ளோம், இது புற்றுநோய் தன்மைகள் மற்றும் அதன் விளைவுகளைக் கண்காணிக்க உதவுகிறது. இப்போது நாங்கள் எஐ போன்ற தொழில்நுட்ப உதவியுடன் மேலும் இந்தியாவில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியை செயல்படுத்த உறுதி கொண்டுள்ளோம் ஆகவே அரசாங்கம் மேலவை மற்றும் கீழவை ஆகிய இரண்டிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”

மதுரை இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) துணைத் தலைவர் டாக்டர்.J.ஜெபசிங், கூறுகையில்,

“புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மாற்றும் இந்த முயற்சியில் ஐ.எம்.ஏ உறுதியாக நிற்கிறது. இந்த முதல் படி நமது தற்போதைய புற்றுநோய் மருத்துவ சிகிச்சை அமைப்பில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும் மற்றும் பலதரப்பட்ட சுகாதார சேவையை வழங்குபர்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை வழங்கும். அப்போலோ புற்றுநோய் மையம் விரிவான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் முன்னணியில் உள்ளது, புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மாற்றுவதன் மூலம், அனைத்து புற்றுநோய்களுக்கும் அறிக்கையிடப்பட்டு ஆவணப்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும், இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்களின் விகிதங்களைக் கண்காணிக்க உதவும்.”

ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்கம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் உட்பட 15 மாநிலங்கள் ஏற்கனவே புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளது, அதே நேரத்தில் நாடு தழுவிய அமலாக்கம் அவசியமாக உள்ளது. உலகளவில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க், நோர்டிக் நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், கியூபா, புவேர்ட்டோ ரிகோ மற்றும் காம்பியா உட்பட 12 க்கும் மேற்பட்ட நாடுகள் புற்றுநோய் மிகவும் கொடிய நோய் என அறிவித்து அதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளன.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனைகள், மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர். முத்துகுமாரசாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சதீஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் புற்றுநோயியல் ஒருங்கிணைப்பாளர் பிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.