• Wed. Jan 22nd, 2025

புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு-நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஏற்பாடு

Byதரணி

Mar 8, 2023

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஏற்பாடு
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் அனைத்து புதன் கிழமைகளிலும் நடத்தப்பட்டும். அதே போல இன்று நடைபெற்ற இம்முகாமில் 25 பேர் கலந்து கொண்டனர்.நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சீனிவாசன் ( கிழக்கு,) சரவணகுமார் ( மேற்கு) மற்றும் அனிதா (தலைமையிடம் ) அவர்களிடத்தில் புகார் மனுக்களை அளித்தார்கள். மனுக்களை பெற்று அதன் விபரங்களை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் துணை ஆணையாளர்கள் கூறினார்கள். உடன் காவல் உதவி ஆணையாளர்கள் கலந்துகொண்டார்கள்.