உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 மடி கணினிகளை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தனது சொந்த செலவில் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் பால் குளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது இக்கல்லூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் மகளிர் தின பரிசாக 5 லட்சம் மதிப்பிலான ஐந்து மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில்.தளவாய்சுந்தரம் மாணவிகளிடம் பொது அறிவு கேள்விகளை கேட்டபோது.பல மாணவிகள் பதில் சொல்லாத நிலையில்.ரீனா,வணிக வியல் துறை மாணவி சரியான பதில் சொன்னதும்.சம்பந்தப்பட்ட மாணவிக்கு ரூ.5000_த்தை ஏனைய மாணவிகள் முன்னிலையில் பரிசாக கொடுத்தார்.
பின்னர் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தளவாய் சுந்தரம் கூறியதாவது கட்சியை விட்டு கட்சி மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் இதற்கு முன்பு அதிமுகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் மற்றும ராஜபாளையத்தை சேர்ந்த மூர்த்தி ஆகியோர் பாஜகவிற்கு சென்று உள்ளனர் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே முடிவு செய்யப்படுவது இப்போது அது குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை கட்சி வளர்கிறது என்பது அந்தந்த கட்சிகளின் தலைவர்களுக்கு தான் தெரியும் அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வட மாநில தொழிலாளர் பற்றி பிரச்சினை ஏற்படவில்லை ஆனால் தற்போது ஏற்பட்டுள்ளது அரசு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பது அரசின் கடமை என அவர் தெரிவித்தார்.