• Wed. Jan 22nd, 2025

தேசிய கொடியை ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ByA.Tamilselvan

Aug 12, 2022

சுதந்திரதினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்தியஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
75 வது சுதந்திரதினம் வரும் 15ம்தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அதில் பிரதமர் மோடி வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.வீடுகளில் தேசியகொடியை ஏற்றும் போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
1.தேசிய கொடி வீட்டுக்கு மேலே பறக்கவிடவேண்டும்.
2.கொடி தரையை பார்த்த வண்ணம் சாய்வாக பறக்கக்கூடாது
3.கிழிந்த ,அழுக்கடைந்த கொடிகளை பயன்படுத்தகூடாது.
4.கொடியை திரைச்சீலையாக பயன்படுத்தக்கூடாது.
5 தலைகீழாக பறக்க விடக்கூடாது
6. வாகனங்களில் பறக்க விடக்கூடாது
7 கொடியை இறக்கிய பிறகு கசக்கியோ , சுருட்டியோ வைக்ககூடாது
என 7 வழிமுறைகள் பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.