பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில்தகவல்
மக்களவை தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் வென்றதை விட 21இடங்கள் குறைந்து 286 இடங்கள் வெல்லும் என இந்தியாடூடே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்.கூட்டணி 146(+21) பிறகட்சிகள் 111 இடங்களில் வெல்லுமாம். அதாவது பாஜக செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் காங்கிரஸ் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது. 2024 தேர்தலில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் போட்டியிட்டால் பாஜகவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும். மேலும் இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் பாஜகவின் செல்வாக்கு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பலம் குறைந்தாலும் மீண்டும் மோடி ஆட்சி..கருத்துகணிப்பு
