

மதுரையில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மதுரை அருகே உள்ள சேது பொறியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக் கோட்டை விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக 15 வயதுக்கு உட்பட்ட மாணவ – மாணவிகளுக்கு மாநில அளவிலான சதுரங்கம் போட்டிகள் கல்லூரியில் நடந்தது . கடந்த 7 – ந்தேதி தொடங்கிய இந்த போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது . கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் தலைமை தாங்கினார் . கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன் , சீனிமுகமதுஅலியார் , நிலோபர்பாத்திமா , நசியாபாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்த னர் . கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார் .
5 நாட்களாக நடந்த இந்த போட்டியில் , தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300 – க்கும் மேற்பட்ட மாணவ , ல் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத் தினர் . போட்டியின் முடிவில் , ஆண்கள் பிரிவில் தலா 10 பேருக்கும் , பெண்கள் பிரிவில் தலா 10 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது . ஆண்கள் பிரிவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வத் மற்றும் பெண்கள் பிரிவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தேஜஸ்வினி ஆகியோர் முதல்பரிசை வென்றதுடன் , சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர் . இதுபோல் , வெற்றி பெற்ற 20 போட்டியாளர்களும் நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகினர் . வெற்றி பெற்ற மாணவ , மாணவிக ளுக்கு பரிசுகளும் , ரொக்க பணமும் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச் சியில் , கல்லூரி துணை முதல்வர் சிவக்குமார் , அருப்புக்கோட்டை விருதுநகர் சதுரங்க கழகத்தின் உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் அரங்கசாமி, சேக் தாவூத் , லட்சுமணராஜ் மற்றும் விளையாட் டுத்துறை தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர் . முடிவில் , சர்வதேச நடுவர் அனந்தராம் நன்றி கூறினார் .
