வார விடுமுறை நாட்களில் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியதை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் உடை மாற்றும் பகுதியில் மரம் சாய்ந்து விழுந்துள்ளதால் கட்டிடம் சேதமடைந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் அருவியை ஏமாற்றத்துடன் பார்த்து சென்றனர்.