• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

சிவசேனா கட்சியினர் நூதன முறையில் புகார்

சிவசேனா கட்சி சார்பாக ஆட்சியரிடம் நூதன முறையில் மனுவை கூடையில் வைத்து தலையில் சுமந்து வந்து புகார் மனுவை வழங்கினர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் சிவசேனா கட்சி சார்பாக தேனி பழனிசெட்டிபட்டி உள்ள தனியார் மதுபான கூடாரத்தை மூடக்கோரியும், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படும் முறைகேடு தொடர்பான புகார் மனு உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்கள் கடந்த சில மாதங்களாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அந்த புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து புகார் மனுக்களையும் கூடையில் வைத்து, தலையில் சுமந்து நூதன முறையில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நடந்து சென்று சிவசேனா கட்சியின் சார்பாக மக்கள் குறைகளை நிவர்த்தி செய்திட வேண்டி ஏற்கனவே அளித்திருந்த புகார் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் மனுவை ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினர்.