• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தேசியக்கொடி ஏற்றும் முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

Byகாயத்ரி

Aug 15, 2022

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற செல்வதற்கு முன் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தேசியக்கொடி வடிவிலான தலைப்பாகை அணிந்து பிரதமர் மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.