• Tue. Oct 8th, 2024

75 ஆவது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி..

Byதரணி

Aug 13, 2022

சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி 75 ஆவது சுதந்திர தினத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.

நமது ஆகஸ்ட் 11ஆம் தேதி அரசியல் டுடே இணையதள நாளிதழில் ஒரு அறிக்கை விட்டு இருந்தோம். அதனை ஏற்று தமிழ்நாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தில் தேவேந்திர குல வேளாளர், பட்டியல் சமுதாயம் மற்றும் பழங்குடியினர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று திராவிட மாடல் அரசின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா தேசியக்கொடி ஏற்றுதல் தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதி பாகுபாடு இன்றி தேசிய கொடிய ஏற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவு என்று அரசு உத்தரவு தெரிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தரவு பொதுமக்களின் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழக மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவேந்திர குல வேளாளர் ஊராட்சி மன்ற தலைவர்களில் கொடியேற்றம் உரிமையையாரும் தட்டி பறிக்க முடியாது என்று ஆணித்தனமான அரசு உத்தரவு வரவேற்பு பெற்றுள்ளது.

முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி

தேவேந்திரகுல வேளாளர் சார்பாகவும் அவருடைய சார்பாகவும் திராவிட மாடல் அரசின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *