• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம்

ByA.Tamilselvan

May 5, 2023

கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள திரையரங்குகளில் இன்று வெளியானது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இதுதொடர்பாக பல்லாரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்தப் படத்தை தான் தடைசெய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்தப் படத்தை தடைசெய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தைப் பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது. பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத போக்குடன் நிற்கிறது. வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்துள்ளது என தெரிவித்தார்.