• Sat. Jun 3rd, 2023

படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

வெட்டி படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர்க்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணியாக வந்து லூர்து பிரான்சிஸ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *