• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மலை தீபத்தூணில் நேற்று தீபம் ஏற்றிய நிலையில் மலை மேல் செல்ல பக்தர்கள் ஆர்வம்..,

ByKalamegam Viswanathan

Nov 29, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நேற்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதியில் சென்று பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதலே மலைக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருக்கோவில் மேற்பார்வையாளர்கள் குழு அறிவிப்பின் படி உச்சி பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் உச்சிப் பிள்ளையார் கோவிலில் உள்ள தீபமேடை மற்றும் கீழ்புறம் மண்டப பகுதிகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்

இந்தநிலையில் மலை உச்சியில் தீபத்தூண் இருக்கும் பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று மதியம் நிலவரப்படி 627-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதேபோல், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் மதியம் நிலவரப்படி 130-க்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்துள்ளனர்.

மலைப்பகுதியில் இரு வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.