தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு ஜக்கம்பட்டி சுப்புகாலனி பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகே முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன.
மேலும், அப்பகுதியில் குப்பைகள் மற்றும் தேங்காய் மட்டைகள் கொட்டப்பட்டு தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அதிகளவில் காணப்படுவதால், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாக இப்பகுதி மாறி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக, அப்பகுதியில் உள்ள முட்புதர்கள், குப்பைகள் மற்றும் தேங்காய் மட்டைகளை உடனடியாக அகற்றி, சுகாதாரமான சூழலை ஏற்படுத்த ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



