• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் உலக அமைதியை வலியுறுத்தி பேரணி..,

Byp Kumar

Nov 29, 2026

கத்தோலிக்கத் திருச்சபையில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அசிசியார், இயற்கையை நேசித்து உலக அமைதிக்காக வாழ்ந்தவர். இவருடைய 800-வது ஆண்டு நினைவாக கத்தோலிக்கத் திருச்சபை சார்பில் உலக அமைதி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், உலக அமைதியை வலியுறுத்தி திண்டுக்கல் மறை மாவட்டத் துறவியர் பேரவை சார்பாக அமைதி பேரணி மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக கல்லறைத் தோட்டத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து அங்கு மாபெரும் சமய நல்லிணக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் மறைமாவட்ட முன்னாள் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடைபெற்றது.

பங்குத்தந்தைகள் மரிவளன், சாம்சன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மும்மதத்தைச் சேர்ந்த சத்யன், பிரம்மகுமாரர் மீனாட்சிசுந்தரம், ஆபிதா ஷாஹின் ஆகியோர் சமய நல்லிணக்க உரையாற்றினர்.

இதில் 500க்கும் மேற்பட்ட மும்மதத்தைச் சேர்ந்த பொதுமக்கள், துறவியர் பேரவையினர் மற்றும் சமூக சமய நல்லிணக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.