சென்னையில் அடுத்த 6 மாதங்களில், 42 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டதாக அறிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில், சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற ஏ.கே.விஸ்வநாதன், குற்றங்களை தடுப்பதில் நவீன தொழில்நுட்பத்தின் பங்கு மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு, “மூன்றாம் கண்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இதையடுத்து, காவல்துறை மட்டுமல்லாது, பொதுமக்கள், வணிகர்கள் என பல தரப்பினரும், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் பலனாக, 2017ல் சென்னையில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்ததுள்ளது. இதுவே, 2019ல் இரு மடங்காகி, 2 லட்சத்து 70 ஆயிரமாக ஆனது என தெரிவித்தார்