• Thu. Apr 25th, 2024

தமிழகத்துக்கு ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி!..

சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்க்கு சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதனுடன் சேர்த்து, மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக 296 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.

இந்த வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் தொகை கல்வி நிலையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, சுகாதார சேவை மையங்கள், போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த உதவியாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *