• Fri. Apr 26th, 2024

வழிப்பாட்டு தலங்கள் இன்று திறப்பு-பக்தர்கள் வழிபாடு

Byகாயத்ரி

Jan 19, 2022

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது. தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மற்றொருபுறம் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜனவரி 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி கடந்த ஜனவரி 14ம் தேதி முதல் நேற்று வரை அனைத்து வழிபாட்டு தலங்களும் மூட உத்தரவிடப்பட்டது. எனினும் வழிபாட்டு தலங்களில் தினசரி நடைபெறும் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று தைப்பூச நாளன்று முருகன் கோவில்களில் அபிஷேகம் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. இருப்பினும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 5 நாட்களாக அனைத்து வழிப்பாட்டு தளங்களும் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலை முதலே சாமி தரிசனத்திற்காக வழிபாட்டு தலங்களில் குவிய தொடங்கி விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *