கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தமிழகத்தில் திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.
இதை, அனைத்திந்திய அதிமுக சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம், கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டது.
ஆனால், இந்த சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக இந்த அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் அரசு எடுத்த இடையராத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் அறிவித்த 2021, பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர்.
2020ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில், தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775. அந்த காலக்கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய முதல்வராக இருக்கும் ஸ்டாலின், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்தான் கொரோனா தொற்று பரவுகிறது என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
மேலும், ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், இன்றைக்கு இந்த திமுக அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதற்கு முன்னாள், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவிய கொரோனா நோய்த் தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து 9 நபர்களுக்கு பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாக செய்திகள் வெளிவருகின்றன.
இதை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள திமுக அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று திமுக செயல்படுகிறது. ஆகவே, இந்த திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]