சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் நடந்த தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைவாக உள்ளது. இல்லையெனில் இன்னும் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கும்.