ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாகச் செல்லும் தமிழக கர்நாடக இரு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் புலிஞ்யூர் சோதனைச்சாவடி அருகே கரும்பு ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து தனது குட்டியுடன் கரும்பை எடுத்து பசியை ஆற்றிக் கொண்டது அதை லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுனரும், பரவாயில்லை யானைகள் தானே சாப்பிடுது, சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை கரும்பை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லலாம் என்று பொறுமையாக இருந்ததுதான் மெய்சிலிர்க்க வைக்கின்றது.