

54 குடும்பங்களின் வீடுகளுக்கு இலவச பட்டா வழங்க கோரி கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கபட்டது
தேனி மாவட்டம் கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது கோட்டூர் கிராம சர்வே எண் 315 ல், ஊரணியில் 54 வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சார்பாக ஒழுங்குபடுத்துமாறு கடந்த 4 தேதியன்று உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவினை ரத்து செய்யுமாறு 54 குடும்பங்கள் சார்பாக கிருஷ்ண சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 12ஆம் தேதி அன்று மேல்முறையீடு செய்து வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த விசாரணையில் நீதிபதி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிக்கை பெற்று தாக்கல் செய்யுமாறு வழக்கை ஒத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 54 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கவும், சுகாதாரக் கேடான சாக்கடை தேங்கும் பகுதியை மாணவர்கள் மற்றும் ஊரில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி தர பரிந்துரை செய்யுமாறு தெரிவித்தனர்.
பின்னர் கோரிக்கை மனுவை தேனி ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினார்கள்.