

அண்ணா பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ஷாம் (எ)ராஜஅபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பிலிப்வாசு, திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
