• Sun. Mar 16th, 2025

நீதிமன்ற பிடி கட்டளையை நிறைவேற்றிய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

ByT.Vasanthkumar

Feb 19, 2024

SC/ST – வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த எதிரியை பிடித்து நீதிமன்ற பிடி கட்டளையை நிறைவேற்றிய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த SC/ST – வழக்கின் எதிரியான தனபால் (43) த/பெ ஜெயராமன் தெற்கு தெரு, தெரணி கிராமம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த எதிரி தனபால் மீது சிறப்பு SC/ST நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் A.பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி எதிரியை தேடி வந்தனர்.

இதன்படி பாடாலூர் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான குழுவினர் இன்று 19.02.2024-ம் தேதி மேற்படி தனபால் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நீதிமன்ற பிடிக்கட்டளையை நிறைவேற்றியுள்ளனர்.