தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற்பகலில் வெயில் இருக்கும் போது கடுமையான உடலுழைப்பை தவிர்க்கவும், வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். நன் பகல் நேரங்களில் சமைப்பதை தவிர்க்கவும். காற்றோட்டத்திற்கு ஏதுவாக கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்திருத்தல் நல்லது. அதிக புரதம், உப்பு, காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.