• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அடுத்த சில மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்தஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.தமிழகத்தின் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,திருவாரூர்,தஞ்சாவூர், அரியலூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகக் கடற்கரை,குமரி பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.