• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபரை துரத்திப் பிடித்த போலீசார்..,

ByS.Ariyanayagam

Jul 19, 2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபரை துரத்திப் பிடித்த போலீசார், மூட்டை, மூட்டையாக குட்கா, கார் பறிமுதல் – எஸ்.பி.அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் S.P. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் சென்றார் இதனைத்தொடர்ந்து போலீசார் வாகனங்களில் துரத்தி வேடசந்தூர் – தாடிக்கொம்பு நெடுஞ்சாலையில் அருகே பேட்ரிக் பள்ளி அருகே சத்தியநாதபுரம் பகுதியில் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

காரில் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது இதனைத் தொடர்ந்து போலீசார் காரில் வந்த வாலிபரை கைது செய்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.