திண்டுக்கல்லில் சார் பதிவாளர் வீட்டில் – சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக

திண்டுக்கல் ரவுண்ட்ரோடு, லிங்கா அவன்யூ பகுதியில் அமைந்துள்ள பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் 2 வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.




