• Fri. Mar 29th, 2024

ரோம் நகரில் நடைபெறும் ஆயர்கள் மாமன்றத்துக்காக கன்னியாகுமரியில் கொடியை ஏற்றம்

போப்பாண்டவர் வரும் 2023 அக்டோபர் மாதம் ரோம் நகரில் ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் என்று அறிவித்துள்ளதை தொடர்ந்து அதன் முன்னேற்பாடாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் இந்து கிறிஸ்தவ முஸ்லீம் ஆகிய மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து தேவாலயத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் மறைமாவட்டம் சார்பாக கோட்டாறு புனித சவேரியார் தேவாலயத்தில் போப்பாண்டவரின் அறிவிப்பைத் தொடர்ந்து முக்கிய திருப்பலி நிகழ்ச்சி மற்றும் திரு கொடியேற்றம் நடைபெற்றது, கடந்த மே மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் என்ற போப்பாண்டவர் 2021 முதல் 2023 வரை மாமன்ற நிகழ்வினை முன்மொழிந்து வரும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோம் நகரில் ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் என்ற ஒரு புதிய அறிவிப்பை அன்மையில் அறிவித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல கடந்த கடந்த 9, 10 ஆகிய நாட்களில் மேற்கூறிய பணியை உலக அளவில் அவர் ரோம் நகரில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். அதை தொடர்ந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு மறை மாவட்டங்களிலும் இதற்குரிய மதங்களை கடந்த ஒருங்கிணைந்து ஆயத்தப் பணிகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாறு புனித சவேரியார் தேவாலயத்தில் பேராயர் நசரேன் சூசை தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன.

இதில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்து இப்பணியை தொடங்கி, இதற்குரிய கொடியை தேவாலயத்தில் மூன்று மதத்தின் சேர்ந்து ஏற்றிய ஒரு நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வேதனைகள் அதற்கு தீர்வு காண முடியாமல் மக்கள் படும் அவதிகள் ஆகியவை வெளிபடுத்தபட்டன.

இந்த நிகழ்வு குறித்து கோட்டாறு மறைமாவட்ட பேராயர் நசரேன் சூசை செய்தியாளர்களிடம் கூறுகையில், போப் ஆண்டவர் இந்த ஆயர்கள் மாமன்றத்தை ஏன் அறிவித்தார்கள் என்று நினைக்கின்ற போது, மாறிவரும் கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு அது பெரும் தொற்றாக இருக்கலாம், இயற்கை பேரழிவில் ஆக இருக்கலாம் புலம்பெயர்ந்தவர்கள் சார்ந்ததாக இருக்கலாம், வறுமைக்கு உட்பட்ட மக்களுக்காக இருக்கலாம், பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அடாவடித்தனமாக இருக்கலாம், இப்படி இந்த உலகம் இன்று ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மையமாகக் கொண்டு அதற்குத் தக்க நம்மை எப்படி மாற்றிக் கொள்வது – புதுப்பித்துக் கொள்வது என்ற கோணத்தில் இந்த மாமன்றம் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *