• Thu. Apr 18th, 2024

பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

ByS.Navinsanjai

Mar 15, 2023

திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 15க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை.15 கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடி செய்த நபரை கைது செய்யாமல் இழுத்தடிப்பதாக பாதிக்கப்பட்டோர் பேட்டி…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீது கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்டோர் புகார் கொடுத்துள்ளனர். 15 மேற்பட்ட நபர்களிடம்
அவர்களது இடத்தை மோசடி செய்து ஏமாற்றிய பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார், விஜயகுமார் ,ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் பணத்தை பெற்று தரும்படி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இவர்களது புகார் தொடர்பாக பல்லடம் போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மாவட்ட ஆட்சியரிடமும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்தனர்.அதனை தொடர்ந்துபல்லடம் காவல்துறையினர் பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் உட்பட நான்கு பேர் வழக்குப்பதிவு செய்தனர்.இது தொடர்பாக பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் 10-க்கும் மேற்பட்ட மக்கள் புகார் அளித்தனர். அதில் கோவை, திருப்பூர்,ஈரோடு,பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்த சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க புகார் செய்யபட்டு எப்.ஐ.ஆர் ஆன நிலையில் சிவகுமாரின் வாகனம் அவருக்கு திரும்ப வழங்கப்பட்டு விட்டது.ஆனால் புகார் கொடுத்தவர்களின் வாகனத்தை தருவதற்கு பல்லடம் போலீசார் இழுத்தடிப்பதாகவும் பல்லடம் காவல் நிலைய போலீசார் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட சிவக்குமாரை கைது செய்ய 30 நாட்கள் கடந்த பின்னரும் கைது செய்யாமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்து. பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியை அடுத்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *