மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் கார்த்திகேயன்,பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சேடப்பட்டி, உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் எனவும், விவசாயிகள் வாங்கிய உரங்களுக்கு விலை ரசீது வழங்கப்படவில்லை எனவும், மேலும் விவசாயிகளிடம் உரங்களின் விலைகளை உயர்த்தி வாங்குவதாக வேதனையுடன் சார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்., விலை பட்டியல் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வேளாண் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
உசிலம்பட்டி நகர் பகுதிகளில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்தனர்.
இதற்கு இல்ல விழாக்களில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் மீதும் பிளக்ஸ் பேனர்களை வைப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும் வைக்கப்படுகின்றனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்., மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக மின்கம்பங்கள் மீது பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள்,பட்டாசு வெடிப்பவர்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வாட்ஸ் அப் எண்ணியிருக்கு அனுப்பினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உங்களுடைய ஒத்துழைப்பும் தேவை என கேட்டுக்கொண்டார்.

சாப்டூர் பகுதியில் உள்ள 41 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டியும், மின் இணைப்பு பெற்றும் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை அதிகாரிகளிடம் மனு அளிக்கும் இதுவரை பட்டா வழங்கவில்லை என கோரிக்கை முன் வைத்தனர்., மனுக்கள் எந்த நிலையில் என அறிந்து விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.




