உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவது வழக்கம். இருப்பினும் கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்…
வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது.…
தீபாவளியையொட்டி தொடா்ந்து விடுமுறை வந்ததால் ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்குள்ள ராமநாதசுவாமி கோயில் தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். தனுஷ்கோடி மற்றும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்துக்கு சுற்றுலாப்…
திருப்பாலைக்குடி அருகே அண்ணன், தம்பியை பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பழங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்பாண்டின். இவரும், இவரது இளைய சகோதரா் அலெக்ஸ் பாண்டியனும் வளமாவூா் விலக்கு சாலையில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு…
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார். இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட…
ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்தக் குதிரையின் நிலையை…
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல. பொருள் (மு.வ):அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.
மரவள்ளிக்கிழங்கு-1மிளகாய் பொடி,உப்பு-தேவையான அளவு எண்ணெய்-பொரித்தெடுக்க மரவள்ளிக் கிழக்கு தோலுரித்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு வேகவைத்து நீரை நன்கு வடிகட்டியபின் கிழங்குடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு ஈரமான தேயிலைத்தூள் பை, வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் உடனடியான பலனை உணரலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…