உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவது வழக்கம். இருப்பினும் கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக நேற்று ,இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். இவர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

இவர்களுக்கு உடைமாற்றும் அறை, கழிவறை வசதி எதுவும் இல்லாததால் அனைவரும் மிகுந்த மனவேதனை அடைந்தனர். அங்குள்ள கழிவறை பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இதற்கு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் போர்க்கால அடிப்படையில் சுற்றுலா பயணிகளின் அடிப்படைத் தேவைகளை செய்துதர வேண்டும் ஏன தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.